தனுஷ் 43 படத்தை இயக்கும் கார்த்திக் நரேன்.. கதாநாயகிக்கு வலைவீச்சு..

by Chandru, Feb 4, 2020, 18:29 PM IST

அஜித்குமார் நடித்த விவேகம், விஸ்வாசம் படங்களை தயாரித்த டிஜி.தியாகராஜனின் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் கடந்த பொங்கல் தினத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்த பட்டாஸ் படத்தை வெளியிட்டது.

இதையடுத்து மீண்டும் அதே நிறுவனம் தனுஷ் நடிக்கும் மற்றொரு புதிய படத்தை தயாரிக்கிறது. இது தனுஷின் 43வது படமாக உருவாகிறது. இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார். இவர் துருவங்கள் பதினாறு , மாஃபியா , நரகாசுரன் போன்ற படங்களை இயக்கியவர். இப்படத்திற்காக கதாநாயகி மற்ற நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. வரும் அக்டோபர் மாதம் படத்தை திரையிட திட்டமிட்டுள்ளனர்.

You'r reading தனுஷ் 43 படத்தை இயக்கும் கார்த்திக் நரேன்.. கதாநாயகிக்கு வலைவீச்சு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை