காமெடி நடிகர் யோகி பாபு சமீபகாலமாக இல்லாத படங்களே இல்லை என்பதுபோல் 90 சதவீத படங்களில் காமெடி வேடங்களில் நடிக்கிறார். கூர்கா, தர்மபிரபு, ஜாம்பி போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். அடுத்து காக்டெயில் என்ற படத்தில் நடிக்கிறார். பிஜி மீடியா ஒர்க்ஸ் சார்பில் முருகன் தயாரித்து இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லக் நேற்று வெளியிடப்பட்டது. அதைக் கண்டு பலரும் ஷாக் ஆகினார். தமிழ் கடவுள் என்றுபோற்றப்படும முருகன் கோலத்தில் யோகிபாபு படம் சித்தரிக்கப்பட்டிருந்தது.
தலையில் கிரீடம், கையில் வேல், மயில்வாகனத்துக்கு பதிலாக ஒரு புறா என யோபாபு முருகர் வேடம் போற்றதுபோன்ற அப்படம் காமெடியாக சித்தரிக்கப்பட்டிருந்தது. அதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
இதுகுறித்து இயக்குனர் விஜய முருகன் விளக்கம் அளித்தார். 'ஆஸ்திரேலியாவை சேர்ந்த காக்டெயில் என்ற கிளி இப்படத்தில் நடிக்கிறது. எனவேதான் படத்துக்கு அந்த தலைப்பு வைக்கப்பட்டது. கடவுள் முருகன் வருவதாக ஒரு காட்சி உள்ளது. அதற்காக யோகிபாபு ஸ்டில் அந்த தோற்றத்தில் வெளியிடப்பட்டது. வேறு உள்நோக்கமும் எதுவும் கிடையாது. எந்தவித உள்நோக்கமும் இல்லாத நிலையில் வெளியிடப்பட்ட ஒரு போஸ்டர் சர்ச்சைகளுக்கு உள்ளானது நாங்களே எதிர்பாராதது. மதத்தைப் பற்றியோ அவர்களின் உணர்வுகளைப் பற்றியோ மரியாதைக்குறைவாக காட்சிகள் வசனங்கள் இடம் பெறவில்லை. பட போஸ்டர் பிரிண்ட் செய்யப்பட்டு கொடுத்து விட்டதால் இன்று அந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. ஒரு தயாரிப்பாளராக பொருளாதார நிலையை சார்ந்து இருப்பதால் அது நிறுத்த வழி இல்லாது ஒட்டியிருக்கோம். இப்படிப்பட்ட நிகழ்வு இனி நிகழாது. பெரும்தன்மையோடு கடந்து போனவர்களுக்கும் தன்மையோடு சுட்டிக்காட்டியவர்களுக்கும் எங்கள் நன்றிகள்" என தெரிவித்துள்ளார்.