ரஜினிக்காக குஷ்பு, நயன்தாரா நேருக்கு நேர் மோதல்.. இரண்டு பெண்டாட்டி கதை?

by Chandru, Feb 4, 2020, 15:54 PM IST

ரஜினிக்காக குஷ்புவும் நயன்தாராவும் நேருக்கு நேர் மோதிக்கொள்கிறார்களா? இது எப்படி நடந்தது என்று அதிர்ச்சி அடைய வேண்டாம். இது எல்லாமே ஒரு படத்தின் கதைக்குள் நடக்கும் சம்பவங்களாக வரவிருக்கிறதாம்.

ரஜினிகாந்த் நடிக்கும் 168வது படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் நயன்தாராவும் இப்படத்தில் அதிரடியாக இணைந்திருக்கிறார். இளம் ஹீரோயின் கீர்த்தி மற்றும் 3 சீனியர் ஹீரோயின்கள் நடிப்பதால் கதைக்களம் எப்படி அமையும் என்ற அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ரஜினிக்கு இரண்டு மனைவிகள் ஒரு தங்கை. இரண்டு மனைவிகளாக குஷ்பு, மீனா நடிக்கின்றனர். தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். குஷ்பு ஏற்கனவே ரஜினியை பிரிந்து வாழ்வதுடன் ரஜினி மீது வழக்கு தொடர்ந்து அவருக்கு எதிராக வாதாடுகிறார். ரஜினியை சரமாரியாக கேள்வி கேட்கும் நிலையில் அவரது சார்பில் வாதாடும் வழக்கறிஞராக நயன்தாரா நடிக்கிறார். ரஜினிக்கு எதிராக குஷ்பு வாதாட ரஜினிக்கு ஆதரவாக நயன்தாரா வாதாடுகிறார். இது எல்லாம் ரஜினியின் குடும்ப பின்னணியில் நடக்கும் கதையாக அமைக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தில் சூரி, சதீஷ உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் தீபாவளிக்கு முன்னதாக இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கின் றனர். ஏற்கனவே இப்படத்துக்கு என்ன பெயர் வைக்கப்பட உள்ளது என்பது இணைய தளத்தில் ஒரு தர்க்கமமே நடந்து வருகிறது. வியூகம், மன்னவன், அண்ணாத்த என 3 பெயர்களில் ஏதாவதுஒரு பெயர் வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. கடைசியில் ரஜினியும், இயக்குனரும் என்ன முடிவு செய்கிறார்களோ அதுவே படத்துக்கு தலைப்பாகும் என்பதுதான் நிஜம்.


Leave a reply