ஹாலிவுட் படத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்.. வாய்ப்பு வந்தால் மீண்டும் நடிக்க முடிவு..

by Chandru, Feb 5, 2020, 15:47 PM IST

கிழக்குச் சீமையிலே, சீவலப்பேரி பாண்டி போன்ற பல படங்களில் நடித்திருக்கும் நடிகர் நெப்போலியன் முதல்முறையாக நடிகர் ஜீ வி பிரகாஷ் உடன் இணைந்து ட்ராப் சிட்டி என்ற ஹாலிவுட்டில் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை டெல் கே. கணேசன் மற்றும் ஜி பி திமோதியோஸின் கைபா பிலிம்ஸ் நாசிக் ராவ் மீடியா மற்றும் கிங்டம் ஓவர் ஏவரிதிங் என மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ரிக்கி பிற்செள் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

இதில் ஜிவி பிரகாஷ் மற்றும் நெப்போலியன் உடன் சேர்ந்து டிராபிக் தண்டர் , பர்சி ஜாக்சன், பிக் மாமா ஹவுஸ் போன்ற பிரபல ஆங்கில படங்களில் நடித்துள்ள பிராண்டன் டி ஜாக்சன், டெட் பிரஸிடெண்ட்ஸ், நோர்பிட் படங்களில் நடித்த கிலிப்டன் மற்றும் நடிகை எரிகா பின்கெட்டும் நடித்துள்ளனர்.

ஏழ்மையில் வாடும் ஒரு பாடகனின் கதைதான் ட்ராப் சிட்டி. இந்த பாடகன், வறுமையின் காரணமாக ஒரு போதைப்பொருள் கும்பலின் தலைவனிடம் வேலைக்கு சேர்கிறான். வேலைக்கு சேர்ந்தபின் , அவன் எழுதிய ஒரு பாடல் உலகெங்கும் பிரபலமாகிறது. ஆனால், துரதிஸ்டவசமாக, அவன் பாடல் பிரபலமாகும் போது அவன் கைது செய்யப்படுகிறான். அவன் குற்றத்தின் நிமித்தம் அவன் புகழும் பரவுகிறது. இப்படி இருக்க, அவனை கொல்ல ஒரு முயற்சி நடக்கிறது. அதன்பின் அந்த பாடகன் என்ன செய்கிறான் என்பதுதான் கதை.

இதன் படப்பிடிப்பு அமெரிக்காவில் உள்ள நேஷவில் பகுதியில் நடந்தது. படப்பிடிப்பு முடிந்து படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருப்பதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளார்கள். ட்ராப் சிட்டி இந்த ஆண்டு கோடை விடுமுறை காலத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a reply