ரவிவர்மா ஓவியத்துக்கு போஸ் கொடுத்த ஹீரோயின்கள்.. கலர்புல் ஆன குஷ்பு, சமந்தா, ஸ்ருதி ..

by Chandru, Feb 5, 2020, 15:56 PM IST

புகழ்பெற்ற ஓவியர் ராஜா ரவிவர்மாவின் சித்திரங்கள் பிரசித்திப்பெற்றவை. கண்களை கொள்ளை கொள்ளும் அழகுடன் அவர் வரைந்த ஓவியங்கள் விலை மதிப்பு மிக்கது. அந்த ஓவியங்களை பார்த்து ரசித்த நடிகை சுகாசினிக்கு திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. ரவிவர்மாவின் ஓவியங்களைப்போல் நடிகைகளுக்கு மேக் அப் அணித்து அந்த ஓவியங்களில் இருப்பதுபோலவே தத்ரூபமாக போஸ் கொடுக்க வைத்து புகைப்படம் எடுத்து அதனை கேலண்டராக வெளியிட எண்ணினார். அதுகுறித்து சக நடிகைகளிடம் பேசியபோது ஒப்புக்கொண்டனர். இதற்காக பிரத்யோக காஸ்டியூம், நகைகள் தயாரிக்கப்பட்டன.

குஷ்பு, சமந்தா, ஸ்ருதிஹாசன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரம்யா கிருஷ்ணன் போன்ற நடிகைகள் உள்ளிட்ட 12 பிரபலங்களுக்கு ரவிவர்மா ஓவியத்தில் இருக்கும் பெண்கள்போலவே மேக் அப் அணிவிக்கப்பட்டது. அப்படங்கள் நெட்டில் ரசிகர்களை கவர்ந்துள்ளதையடுத்து வாழ்த்து கமென்ட்கள் குவிந்து வருகின்றன.

இதுபற்றி சுகாசினி கூறும்போது,' ரவிவர்மாவின் ஓவியத்தில் பெண்கள் மிகவும் நேர்த்தியாக சித்தரிக்கப்பட்டர்கள். அதேபோல் தத்ரூமாக மேக் அப் அணியப்பட்டு ஹீரோயின்கள் பங்குபெற்ற படப்பிடிப்பு நடத்தப்பட்டது. தற்காப்பு மற்றும் பெண்கள் கல்வி, ஆரோக்கியம் போன்ற பணிகளை செய்துவரும் நாம் அறக்கட்டளைக்காக இதற்கான ஏற்பாடுகளை நடத்தியது' என்றார்


Leave a reply