நாடோடிகள் பட நடிகர் திடீர் மரணம்.. மாரடைப்பில் உயிர்பிரிந்தது..

by Chandru, Feb 5, 2020, 16:27 PM IST

மாப்ளே இந்த கையில கவர்மென்ட் அப்பாயின்மென்ட் ஆர்டர் வாங்கிட்டு வாங்க அந்த கையில என் பொண்ணு என்று நாடோடிகள் படத்தில் நடிகை அன்னன்யாவை காதலிக்கும் சசிகுமாரிடம் வசனம் சொல்லி காமெடியாக நடித்தவர் கே.கே.பி.கோபாலகிருஷ்ணன் (54). இவரை இப்படத்தில் இயக்குனர் சமுத்திரகனி நடிகராக அறிமுகப்படுத்தினார். மேலும் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் நடோடிகள் 2ம் பாகம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்திருக்கிறார்.  

உடல் நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த கோபாலகிருஷ்ணன்,  ஈரோடு குப்பகவுண்டம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் வசித்துவந்த நிலையில் இன்று காலை அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. அதில் அவர் மரணம் அடைந்தார்.


Leave a reply