பாக்யராஜை பார்த்து காதலித்த சாந்தனு.. அவரே வெளியிட்ட தகவல்..

by Chandru, Feb 7, 2020, 18:31 PM IST

இயக்குனர், நடிகர் கே.பாக்யராஜ் நடிகை பூர்ணிமாவை காதலித்து மணந்தார். இவர்களது மகன் சாந்தனு. குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்து இப்போது ஹீரோவாக நடிக்கிறார். தற்போது விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பாக்யராஜ், பூர்ணிமா தம்பதிகள் 36 வருடங்களை இணைந்து மகிழ்ச்சியாக பகிர்ந்துகொண்டிருக்கின்றனர். இதுபற்றி சாந்தனு மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

அவர் கூறும்போது,'இன்பத்திலும், துன்பத்திலும் உங்களுடைய (பாக்யராஜ்-பூர்ணிமா) 36 வருட இணை பிரியாத வாழ்க்கைதான் எனக்கு காதலிலும், திருமணத்திலும் நம்பிக்கை தந்தது. உங்களைப்போன்ற பெற்றோரை ஒவ்வொரு குழந்தைகளும் பெற வேண்டும்' என மகிழ்ச்சி வெளிப்படுத்தி இருக்கிறார்.
சாந்தனுவும் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் கீர்த்தியை காதலித்து மணந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a reply