நாகார்ஜூனா படப்பிடிப்பை பாதித்த கொரோனா வைரஸ்.. தாய்லாந்து ஷூட்டிங் கேன்சல்..

by Chandru, Feb 7, 2020, 18:44 PM IST

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை திகிலில் ஆழ்த்தி உள்ளது. பல நாடுகள், சீனர்கள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு தடை விதித்திருப்பதுடன் தங்கள் நாட்டினரும் சீனாவுக்கு செல்ல தடைவிதித்திருக்கிறது. இந்தியாவிலும் இந்த தடை உள்ளதுடன் அங்கிருந்து வருபவர்கள் தீவிர கண்காணிப்புக்கும் மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்தப்படுகின்றனர். கொரோனா வைராஸ் பாதிப்பால் நாகார்ஜூனா படப்பிடிப்புக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

வைல்டு டாக் என்ற படத்தில் நடித்து வருகிறார் நாகார்ஜூனா. தெலுங்கில் உருவாகி வரும் இப்படத்தை சாலமன் டைரக்டு செய்கிறார் சையாமி கெர் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடந்து வருகிறது. அடுததகட்ட படப்பிடிப்பை தாய்லாந்தில் உள்ள அடர்ந்த காட்டு பகுதியில் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக தகவல் வந்ததையடுத்து படக்குழு தங்களின் தாய்லாந்து படப்பிடிப்பு திட்டத்தை ரத்து செய்திருக்கிறது. படப்பிடிப்பு ரத்தான தகவலை பட ஹீரோயின் சையாமி கெர் தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

You'r reading நாகார்ஜூனா படப்பிடிப்பை பாதித்த கொரோனா வைரஸ்.. தாய்லாந்து ஷூட்டிங் கேன்சல்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை