வேற்றுகிரகவாசி படத்தில் சிவகார்த்திகேயன்.. ரகுல் ப்ரீத், இஷா கோபிகர் இணைகின்றனர்..

by Chandru, Feb 7, 2020, 18:41 PM IST

விண்வெளியை மையமாக வைத்து உருவாகும் சைன்ஸ் பிக்ஸன் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். ரவிகுமார் இயக்குகிறார். இப்படத்துக்கு 'அயலான்' என பெயரிடப்பட்டிருக்கிறது. கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு ஏற்கனவே நடந்து வந்த நிலையில் பைனான்ஸ் பிரச்னை காரணமாக தடைபட்டது. தற்போது பிரச்னையிலிருந்து மீண்டு வேகமாக படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.

நாயகியாக நடிக்கும் ரகுல் ப்ரீத் உடன் மற்றொரு நடிகையும் தற்போது இணைகிறார்.
தமிழில் ஏற்கனவே என் சுவாச காற்றே, நெஞ்சினிலே, ஜோடி போன்ற படங்களில் நடித்த இஷா கோபிகர் அயலான் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் நடிக்க வருவதால் குஷியில் இருக்கிறார் இஷா. தனது ரீஎன்ட்ரி குறித்து மகிழ்ச்சி வெளியிட்டிருக்கும் அவர் 'சென்னையில் படப்பிடிப்புக்காக வந்திருக்கிறேன். கடுமையான உழைக்கும் எண்ணத்துடன் வந்திருப்பதுடன் படப்பிடிப்பிலும் பங்கேற்றுள்ளேன்' என குறிப்பிட்டிருக்கிறார். இப்படத்தில் மேலும் யோகி பாபு, கருணாகரன், பாலசரவணன் ஆகியோரும் நடிக்கின்றனர்.


Leave a reply