தெரு தெருவாக போஸ்டர் ஒட்டும் இயக்குனர்.. தேசிய விருது படத்துக்காக திடீர் முடிவு

by Chandru, Feb 13, 2020, 20:09 PM IST

கடந்த ஆண்டு தேசிய விருது வென்ற படம் பாரம். இப்படம் தமிழில் எப்போது யாரால் இயக்கி தயாரிக்கப்பட்டது. யாரெல்லாம் நடிகர்கள் என்று கூட திரையுலகிலேயே பலருக்கு புரியாத புதிராக இருந்தது. 90 நிமிடம் ஓடக்கூடிய இப்படம் பற்றிய விவரம் தற்போது திரையுலகினருக்கு தெரியவந்திருப்பதுடன் இப்படத்தை வெளியிடுவதற்கு தனது பெயரை தந்து உதவியிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். படம் வெளியாவதற்கு இயக்குனர்கள் ராம், மிஷ்கின் போன்றவர்கள் பெரிய ஆர்வம் காட்டி உள்ளனர்.

புனே இன்ஸ்டிடியூட்டில் எடிட்டிங் முடித்து பின்னர் பல்வேறு படங்களுக்கு பணியாற்றிய பிரியா கிருஷ்ணசாமி இப்படத்தை இயக்கி உள்ளார். அவரது மகள் அர்ட்ரா ஸ்வரூப் தயாரித்திருக்கிறார். ஆர்.ராஜூ, சுகுமார் சண்முகம், சுபா.முத்துக்குமார், ஜெயலட்சுமி, ஸ்டெல்லா கோபி என 87 புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

இப்படம் பற்றி கூறிய மிஷ்கின்,'நான் இதுவரை எடுத்த படங்களையெல்லாம்விட ஒரு படி மேலே வைத்து பாரம் படத்தை நான் பார்க்கிறேன். இப்படத்தின் இயக்குனர் பிரியாவை பார்த்தபோது இவரெல்லாம் என்ன படம் எடுத்துவிடப்போகிறார். அதற்கு வெற்றிமாறனும், ராமுவும் எதற்கு சப்போர்ட் செய்கிறார்கள் என்ற எண்ணினேன். படத்தை பார்க்க அழைத்தபோது வேண்டா வெறுப்பாகவே போனேன். காட்சிகள் நகர நகர நான் அதிர்ந்துபோனேன். படம் முடிந்தபோது நீ எல்லாம் என்ன படம் எடுக்கிறாய் என்று என்னை செருப்பால் அடித்ததுபோன்று உணர்ந்தேன். படம் பார்த்து முடித்த பிறகு என் அப்பா அம்மா ஞாபகம் வந்துவிட்டது. அவர்களுக்கு தேவையான பண உதவியை நான் செய்துவந்தாலும் ஊரில் சென்று அவர்களை பார்க்கவில்லையே என்று தோன்றியது. சீக்கிரம் அவர்களை நேரில் பார்க்க செல்கிறேன். பாரம் படத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. இப்படத்துக்கு என் சொந்த செலவில் போஸ்டர் அச்சடித்து பல்வேறு ஊர்களில் 20 இடங்களில் தெருத்தெருவாக சென்று அதனை ஒட்ட முடிவு செய்திருக்கிறேன்' என்றார்.

You'r reading தெரு தெருவாக போஸ்டர் ஒட்டும் இயக்குனர்.. தேசிய விருது படத்துக்காக திடீர் முடிவு Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை