ராஜ்கிரண் நடிக்கும் 2ம் பாகம் படத்தை இயக்குகிறார் தனுஷ் கவுண்டமணி முக்கிய வேடத்தில் ரீஎன்ட்ரி..

by Chandru, Feb 13, 2020, 20:15 PM IST

அசுரன் பட ரிலீஸ் ஆகி பெரிய வெற்றியை பெற்றதையடுத்து அவர் நடித்த பட்டாஸ் படமும் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். இது தவிர மேலும் 3 படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இப்படத்தை முடித்தவுடன் யாரடி நீ மோகினி படத்தை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். நடிப்பில் படுபிஸியாக இருக்கும் தனுஷ் அதற்கிடைய தனக்கு பிடித்தமான இயக்குனர் பணியை மீண்டும் கையில் எடுக்கிறார்.

ஏற்கனவே பா.பாண்டி என்ற படத்தை தனுஷ் இயக்கினார். இதில் ராஜ்கிரண், ரேவதி நடித்திருந்தனர். தற்போது இப்படத்தின் 2ம் பாகம் இயக்க முடிவு செய்திருக்கிறார் தனுஷ். இந்த தகவலை திருடா திருடி படத்தை இயக்கியவரும் தற்போது தனுஷ் பட மன்றங்களை நிர்வகித்து வருபவருமான சுப்ரமணியம் சிவா தெரிவித்திருக்கிறார். பா.பாண்டி இரண்டாம் பாகத்தில் ராஜ்கிரண் நடிப்பதுடன் முக்கிய வேடத்தில் அவருடன் இணைகிறார் கவுண்டமணி.


Leave a reply