சிம்பு நடிகையின் காதலை பிரித்த பெண்.. காதலன் மீது ஹீரோயின் சரமாரி புகார்..

by Chandru, Feb 13, 2020, 20:20 PM IST

தமிழில் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு பின்னர் இந்தி பட வாய்ப்பு தேடி சென்ற நடிகைகள் பலர் இருக்கின்றனர். அப்படி சென்றவர்களில்  தனுஷுடன் ஆடுகளம் படத்தில் ஜோடி போட்ட நடிகை டாப்ஸி இந்தியில் வித்தியாசமான பாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் சிம்புவுடன் சிலம்பாட்டம் படத்தில்  ஜோடி போட்டவர் சனாகான்.  

பயணம், ஆயிரம் விளக்கு, ஈ என ஒரு சில தமிழ் படங்கள் மட்டுமே நடித்துவிட்டு பின்னர் இந்தியில் நடிக்கச் சென்றார். அங்கு பட வாய்ப்புக்காக போராடிக்கொண்டிருக்கிறார். பாலிவுட் நடிகர் சல்மான் கான் உடன் நெருக்கம் காட்டி அவர் டிவியில் நடத்தும் பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிறகு அவருடன் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்றார். பெரிய பட வாய்ப்பு எதுவும் இல்லாமல் இருக்கும் சனாகானுக்கு நடன இயக்குனர் மெல்வின் லூயிஸ் ஆறுதலாக இருந்தார். அவருடன் நட்பாக இணைந்தவர் பின்னர் காதலி யாக மாறினார். பல ஆண்டுகள் காதலித்த இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். ஆனால் திடீரென்று மெல்வினுக்கு பிற பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி அவரை விட்டு விலகியிருக்கிறார் சனா. மெல்வின் மீது சரமாரியாக புகார் கூறியிருக்கும் அவர் தங்களது காதல் பிரிவதற்கு ஒரு பெண் காரணமாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்,
இதுபற்றி சனாகான் கூறும்போது,' மெல்வின் ஒரு ஏமாற்றுக்காரர். அவரை முழுமையாக நம்பி காதலித்தேன். ஆனால் அவர் பல பெண்களை ஏமாற்றியிருப்பது இப்போது தான் எனக்கு தெரியவந்தது.  எங்கள் காதலை பிரிப்பதில் ஒரு பெண் ஈடுபட்டார்.  அவரது செயல் வெட்கித் தலைகுனிய வேண்டியதாக உள்ளது. அந்த பெண் யார் என்பதை சீக்கிரமே நான் சொல்வேன்' என்றார்.


Leave a reply