நயன் காதலை மீண்டும் ஏற்க மறுக்கும் சிம்பு.. காதல் வேண்டாம் நட்பு போதும்..

by Chandru, Feb 13, 2020, 20:31 PM IST

ஒரு சில ஜோடிகள் சினிமாவில் மிகவும் பொருத்தமாக அமைவதுண்டு அப்படி ஒன்றாக அமைந்தது சிம்பு. நயன்தாரா ஜோடி. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த வல்லவன், இது நம்ம ஆளு படம் நல்ல வரவேற்பை பெற்றது. கோ என்ற படத்தில் இருவரும் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தனர். இருவரும் காதல் பறவைகளாக வலம்வந்து பின்னர் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரேக் அப் செய்துகொண்டு விலகினர். மீண்டும் இந்த ஜோடி சினிமாவில் இணையுமா என்பதை யாராலும் கணிக்க முடியாது. அதேசமயம் மீண்டும் ஒருமுறை நயன்தாரா சிம்புவிடம் காதலை சொன்னால் அவர் ஏற்பாரா என்ற கேள்வியும் பலருக்கு இருந்தது. 

இதுகுறித்து சிம்புவிடம் பேட்டி ஒன்றில் கேட்டபோது,'இருவரும் தற்போது நண்பர்கள். அவ்வளவுதான். எங்களுக்கு இடையில் வேறு எதுவும் இல்லை' என பதில் அளித்திருக்கிறார். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதற்கிடையில் வாலு படத்தில் இணைந்த சிம்பு, ஹன்சிகா ஜோடி இடைப்பட்ட காலத்தில்  பிரிந்திருந்தனர். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு, 'மகா' படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.


Leave a reply