தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 16 மொழிகளில் திரைப்படம் மற்றும் பக்தி பாடல்கள் என 40 ஆயிரம் பாடல்களுக்குமேல் பாடியிருப்பவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். காஞ்சி மடத்துக்கு தனது பூர்வீக இல்லத்தை அளிக்கவிருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அதை தற்போது நிறைவேற்றி காட்டியிருக்கிறார்.
அதற்கான ஏற்பாடுகள் முறைப்படி செய்யப்பட்டது. இதில் காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் கலந்துகொண்டார். ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள தனது பூர்வீக வீட்டை அவரிடம் தானமாக அளித்தார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இந்த வீட்டை வேத பாட சாலையாக நடத்திக்கொள்ள வழங்கியிருக்கிறார்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆன்மிகவாதி மட்டுமல்ல அதிகபட்ச பாடல்கள் பாடி கின்னஸில் இடம்பிடித்திருக்கிறார். 6 முறை தேசிய விருதுகள் வென்றதுடன் மத்திய அரசால் 2001ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2011ம் ஆண்டு பத்மபூஷன் விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டார். பாலசுப்ர மணியம் தற்போது சென்னை யில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.