70 வருட கால்ஷீட் தந்த நடிகை.. இயக்குனரின் லவ் டெக்னிக்..

by Chandru, Feb 14, 2020, 19:33 PM IST

நாயகன் படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக அறிமுகமானவர் சரண்யா. அதன்பிறகு பல்வேறு படங்களில் நடித்தவர் ஒரு கட்டத்துக்கு பிறகு அம்மா நடிகை ஆனார். சரண்யாவுக்கும் மறைந்த இயக்குனர் ராஜசேகருக்கும் திருமணம் நடந்தது பின்னர் கருத்துவேறுபாடால் இருவரும் பிரிந்தனர். அதன்பிறகு சரண்யாவை 2வது திருமணம் செய்துகொண்டார் டைரக்டரும், நடிகருமான பொன்வண்ணன். இவர்களுக்கு 2 மகள் உள்ளனர்.

சரண்யாவை மணக்க விரும்பிய இயக்குனர் பொன்வண்ணன் தனது காதலை அவரிடம் மறைமுகமாக தெரிவித்தார். அந்த ருசிகர தகவலை காதலர் தினத்தை முன்னிட்டு சரண்யாவே வெளியிட்டிருக்கிறார். அவர் கூறும்போது,'பொன்வண்ணன் என்னை சந்தித்து காதலை தெரிவித்தவிதம் என் வாழ்வில் மறக்க முடியாது. என்னை சந்திக்க வந்த அவர், 'நான் ஒரு படம் இயக்க உள்ளேன். அதற்கு நீங்கள் கால்ஷீட் தர வேண்டும்' என்று கேட்டார். 'எத்தனை நாள் கால்ஷீட் வேண்டும்' என்று கேட்டபோது, '70 வருடத்துக்கு கால்ஷீட் வேண்டும்' என்றார். அவர் அப்படி சொன்னதும் அவரது காதல் எனக்கு புரிந்தது' என்றார். பொன்வண்ணன் காதல் சொன்ன விதத்தை சரண்யா தெரிவித்திருப்பது வைரலாகி வருகிறது.


Leave a reply