ஆர்யாவை கட்டுமஸ்த்தாக்கிய பா.ரஞ்சித்.. உடற்கட்டை மாற்றி அசத்தினார்..

by Chandru, Feb 20, 2020, 16:58 PM IST

நடிகர் ஆர்யா கதாபாத்திரங்களுக்கு ஏற்ப அவ்வப்போது தோற்றங்கள் மாற்றி வருகிறார்.

தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். கடுமையான உடற்பயிற்சி செய்து ஃபிட்டாக இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஜிம் பாய்ஸ் அதாவது ஆணழகன் தோற்றத்தில் கட்டுமஸ்தான தோற்றத்துடன் உள்ளார்.

அடுத்து பா.ரஞ்சித் இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க உள்ளார். இதற்காக உடற்கட்டை அதிகரிக்க வேண்டும் என்று கூறியதால் கட்டுமஸ்தான ஆணழகனாக உருமாறியிருக்கிறார். அந்த புகைப்படத்தை நெட்டில் வெளியிட்டார். அதற்கு ஏகத்துக்கு வரவேற்பும், வாழ்த்தும் குவிந்து வருகிறது. தற்போது சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் டெடி படத்தில் நடித்துள்ளார் ஆர்யா.


Leave a reply