டாப்ஸிக்கு கிரிக்கெட், லாவண்யாவுக்கு ஹாக்கி பயிற்சி.. காலையில் மட்டையுடன் கிளம்பும் நடிகைகள்..

by Chandru, Feb 21, 2020, 15:40 PM IST

நடிகை டாப்ஸி இந்தியில் பிரத்தியேகமான கதை அம்சமுள்ள படங்களில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே உத்தரப்பிரதேசத்தில் துப்பாக்கி சுடுவதில் திறமை வாய்ந்த 83 வயது பெண் மணி பிரகாஷி டோமர் கதாபாத்திரத்தை 'சாந்த் கி ஆங்க்' படத்தில் ஏற்று நடித்தார் டாப்ஸி. இதையடுத்து தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் கேப்டன் மிதாலி ராஜ் வாழ்க்கை படத்தில் நடிக்கிறார் டாப்ஸி. முன்னதாக துப்பாக்கி பயிற்சி பெற்ற டாப்ஸி புதிய படத்துக்காக கிரிக்கெட் விளையாட்டிற்காகத் தீவிர பயிற்சி பெற்றார். படப்பிடிப்பு முடியும் வரை டச் விடக்கூடாது என்பதால் காலையில் எழுந்தவுடன் கிரிக்கெட் பேட்டுடன் மைதானத்துக்குச் சென்று பயிற்சி செய்கிறார். அதுபோல் நடிகை லாவண்யா திரிபாதி ஹாக்கி மட்டையும் கையுமாக வீட்டருகே உள்ள மைதானத்துக்குப் புறப்பட்டுச் சென்று விளையாடுகிறார்.

ஹாக்கி விளையாட்டு வீராங்கனையாக ஏ1 எக்ஸ்பிரஸ் என்ற தெலுங்கு படமொன்றில் லாவண்யா நடிக்கவிருக்கிறார். அதற்காகவே இப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.


Leave a reply