நயன்தாராவுடன் நடிக்க சமந்தா ஒப்புக்கொண்டது ஏன்? நச்சுனு பதில் அளித்த நடிகை..

by Chandru, Feb 21, 2020, 15:44 PM IST

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா ஜோடி இணைந்து நடித்தது. மீண்டும் இதே கூட்டணி காத்து வாக்கில் ரெண்டு காதல் என்ற படத்தில் இணைகிறது.கூடுதலாக இம்முறை சமந்தாவும் நடிக்க உள்ளார்.

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து நடிப்பதுபற்றி மனம் திறந்து பதில் அளித்தார் சமந்தா. அவர் கூறும்போது,' இப்படத்தின் கதை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். படப்பிடிப்பு தொடங்கும் நாளை உற்சாகமாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். இதில் எனது கதாபாத்திரம் மிகவும் வேடிக்கை நிறைந்ததாக இருக்கும். அதற்கேற்ப எனது பங்களிப்பும் வலுவாக இருக்கும். விக்னேஷ் சிவன் கதை சொன்ன விதமும் எனது பாத்திரமும் வித்தியாசமாக இருந்தது. விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகிய இரண்டு திறமைசாலிகளுடன் எனது திறமையை எந்த அளவிற்கு வெளிக்காட்ட முடியும் என்பதை அறிந்து கொள்வதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்' என்றார் சமந்தா.


Leave a reply