வாடகைத் தாய் மூலம் பெண் குழந்தை பெற்ற நடிகை.. விஜய், பிரபுதேவாவுடன் நடித்த ஹீரோயின்..

by Chandru, Feb 22, 2020, 18:56 PM IST

பிரபு தேவாவுக்கு ஜோடியாக மிஸ்டர் ரோமியா படத்தில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி. பின்னர் குஷி படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். அத்துடன் மீண்டும் பாலிவுட்டுக்குத் திரும்பியவர் அங்கு பல்வேறு படங்களில் நடித்தார். இந்நிலையில் தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவை கடந்த 2009-ல் திருமணம் செய்தார் ஷில்பா ஷெட்டி.

இவர்களுக்கு வியான் ராஜ் குந்த்ரா என்ற மகன் பிறந்தான். 44 வயதாகும் ஷில்பா ஷெட்டி 2-வது குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டார். ஆனால் இந்த வயதில் கர்ப்பிணியாகி குழந்தை பெற்றுக்கொள்வது சிரமம் என்பதால் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்தார். அதற்காக வாடகைத் தாய் ஒருவரைத் தேர்வு செய்து அவர் மூலம் 2வது குழந்தைக்குத் தாய் ஆகியிருக்கிறார் ஷில்பா. கடந்த 15ம் தேதி பெண் குழந்தை பிறந்த நிலையில் அக்குழந்தையை இந்த பூவுலகிற்கு வரவேற்பதாக நெட்டில் மெசேஜ் பதிவிட்டிருக்கிறார். அந்தக் குழந்தைக்கு சமிஷா என்று பெயர் வைத்திருக்கிறார்.

கடந்த 2014ம் ஆண்டு நடிப்பிலிருந்து ஒதுங்கிய ஷில்பா ஷெட்டி தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். நிகம்மா, ஹங்கமா 2ம் பாகம் என 2 இந்தி படங்களில் இந்த ஆண்டு நடிக்கிறார்.


Leave a reply