தயாரிப்பாளர், நடிகை கடும் மோதல்.. ஓட்டலுக்கு பில் கட்டியது யார்?

by Chandru, Feb 22, 2020, 19:02 PM IST

சுசீந்திரன் இயக்கிய நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் நடித்தவர் மெஹரீன் பிர்ஸடா.

இப்படத்தில் நடித்தபோதே அவர் அடித்த லூட்டி இயக்குநரைக் கடுப்பாக்கியது . இதனால் அவர் நடித்த காட்சிகளை வெகுவாக குறைத்தார். ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்தமாகவே அவரது காட்சிகளைப் படத்திலிருந்து வெட்டி எறிந்தார். பின்னர் விஜய தேவரகொண்டாவுடன் நோட்டா படத்தில் நடித்தார். அப்படம் வரவேற்பை பெறாத நிலையில் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார் மெஹரீன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷுடன் பட்டாஸ் படத்தில் நடித்தார்.இதற்கிடையில் தெலுங்கில் 'அஸ்வத்தாமா'' என்ற புதிய படத்தில் நடித்துள்ளார் மெஹரீன். இதில் நாக சவுரியா கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

வழக்கம்போல் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடந்தது. மெஹரீனும் கலந்துகொண்டார். பட வெளியீட்டுக்கு முதல் நாள் கடைசியாக ஒரு புரமோஷன் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்தார் தயாரிப்பாளர். அதில் பங்கேற்கும்படி மெஹரீனை அழைத்தபோது வர மறுத்தார். இதனால் கோபம் அடைந்த தயாரிப்பாளர், புரமோஷனுக்கு வராவிட்டால் நீங்கள் தங்கியிருக்கும் ஓட்டலின் வாடகையை நான் தரமுடியாது என்று கோபமாகக் கூறிவிட்டார். இதில் மெஹரீன் டென்ஷன் ஆனார். மறுநாள் காலையில் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் தனது அறையிலிருந்து வாடகையைத் தராமல் எஸ்ஸானார்.

வாடகை தராமல் நடிகை ஓட்டலிலிருந்து வெளியேறிய விவரம் பற்றி தெரியவந்தவுடன் ஓட்டல் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது. இதுகுறித்து தயாரிப்பாளரிடம் கேட்டபோது அவரும் வாடகை தர மறுத்தார். பின்னர் வெவ்வேறு பேச்சுவார்த்தைகள், அழுத்தங்கள் கொடுத்த பிறகு வாடகை தர ஒப்புக்கொண்டார் தயாரிப்பாளர்.


Leave a reply