அஜீத் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவா அடுத்து ரஜினி நடிக்கும் 168 வது படத்தை இயக்குகிறார். படத்துக்கு டைட்டில் வைக்காமல் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் 'அண்ணாத்த' என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டது.
கமல் இரட்டை வேடத்தில் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் அண்ணாத்த ஆடுறா ஒத்திக்கோ ஒத்திக்கோ என்ற பாடல் இடம்பெற்றது கமல்ஹாசனே சொந்த குரலில் இப்பாடலைப் பாடியிருப்பார். அந்த பாடலின் முதல் வரியாக இந்த டைட்டில் அமைந்துள்ளதாகக் கமல் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். பட டைட்டிலை பொறுத்தவரை ரஜினி ரசிகர்களை மட்டுமல்லாமல் கமல் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. இதையே சாக்க வைத்து அடுத்த படத்தில் ரஜினியும், கமலும் இணைந்து நடிக்க வேண்டும் என்று சிலர் மெசேஜ் பகிரத் தொடங்கி உள்ளனர்.
தர்பார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா மீண்டும் அண்ணாத்த படத்தில் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா என மேலும் 3 நாயகிகள் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஸ்டுடியோவிலும் சுற்றுப்புறப் பகுதிகளிலும் நடந்து வந்தது. இங்குப் படப்பிடிப்பு முடிவடையும் தறுவாயில் உள்ளது. சிறிது இடைவெளி விட்டு அடுத்த கட்ட படப்பிடிப்பு வட மாநிலங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. மார்ச் மாதம் மத்தியில் கொல்கத்தா, புனேவில் படப்பிடிப்பு நடக்க உள்ளதாகத் தெரிகிறது. 2.0, காலா, பேட்ட படங்களில் வடநாட்டு நடிகர்கள் அக்ஷய் குமார், நானா படேகர், நவாஸுதின் சித்திக் போன்றவர்கள் ரஜினிக்கு வில்லனாக நடித்தனர். அதேபோல் இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஒருவரை வில்லனாக நடிக்க வைக்கத் திட்டமிட்டிருக்கிறார் இயக்குநர் சிவா.