நெஞ்சில் துணிவிருந்தால், பட்டாஸ் போன்ற படங்கள் நடித்திருப்பவர் மெஹரின் பிர்ஸடா. இவர் தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். நாக சவுரியாவுடன் அஸ்வத்தாமா படத்தில் சமீபத்தில் நடித்து முடித்தார். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மெஹரீனுக்கும், பட தயாரிப்பாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மெஹரின் தங்கியிருந்த ஓட்டலுக்கு வாடகை தர மறத்தார் தயாரிப்பாளர். ஆனால் அதுபற்றி கவலைப்படாமல் ஓட்டலிலிருந்து வாடகை தராமல் மெஹரீன் வெளியேறினார்.
இதுபற்றிய தகவல் பரபரப்பாக வெளியானது. மெஹரீன் மீது சரமாரியாகத் தயாரிப்பாளர் புகார் கூறினார். இதனால் அப்செட் ஆன மெஹரீன் மறைமுகமாகத் தயாரிப்பாளருக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்.
பெண்களுக்குச் சம உரிமை பற்றி படங்கள் எடுக்கப்படுகிறது. அப்படி படம் எடுப்பவர்கள் நிஜத்தில் பெண்களுக்கு சம உரிமை மரியாதை தருகிறார்களா? அவர்களை இழிவுபடுத்தும் செயலில்தான் ஈடுபடுகின்றனர். என்னுடைய சுய மரியாதைக்கும், கவுரவத்துக்கும் பங்கம் வரும்போது எனக்கு ஆதரவாக நான் நின்றேன். தொழில் பக்தி என்பது இரண்டு பக்கமும் இருக்க வேண்டும். ஒருவரின் தனிப்பட்ட விஷயத்தில் அவர்களின் சுதந்திரத்துக்கு மரியாதை தர வேண்டும்' எனக் கூறி இருக்கிறார் மெஹரின் பிர்ஸடா. அவரது கருத்துக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து டிவிட்டரில் கமென்ட் பகிர்ந்து வருகின்றனர்.