பரத், நமீதா பட இயக்குநர் கைது.. ரூ 47 லட்சம் பண மோசடி விவகாரத்தால் பரபரப்பு..

by Chandru, Mar 3, 2020, 18:42 PM IST

பரத், நமீதா நடித்த பொட்டு மற்றும் தம்பி வெட்டோத்தி சுந்தரம், சவுகார் பேட்டை போன்ற படங்களை இயக்கியவர் வி.சி.வடிவுடையான். பண மோசடியில் ஈடுபட்டதாக இவரை போலீசார் கைது செய்தனர்.

விருகம்பாக்கத்தை சேர்ந்த சினிமா பைனான்ஸியர் மகேஷ் கோத்தாரி விருகம்பாக்கம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் வடிவுடையான் மீது பணமோசடி குறித்து குறிப்பிட்டிருந்தார்.

'விஷால் நடிக்கும் படத்தை 7 கோடி செலவில் இயக்குவதாகக் கூறி என்னைத் தயாரிக்கக் கேட்டார். தயாரிப்பு செலவுக் காக ரூ 47 லட்சத்தை 3 முறை யாக வெவ்வேறு சமயங்களில் வடிவுடையானிடம் கொடுத் தேன். வருடக்கணக்காகியும் படம் தொடங்கப்படவில்லை. விஷாலிடம் கால்ஷீட் வாங்கியிருப்பதாக என்னிடம் அவர் பொய் சொல்லி பணத்தை மோசடியாகப் பெற்றிருக்கிறார். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். புகாரின் அடிப்படையில் வடிவுடையான் மீது வழக்கு கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.


Leave a reply