ஜூராசிக் பார்க் பட இயக்குநர் மகள் கைது ஆபாசப் பட நடிகை அறிவிப்பு வெளியிட்டவர்..

by Chandru, Mar 3, 2020, 18:46 PM IST

1993ம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் உள்ள திரை அரங்குகளில் வசூலை அள்ளிக்குவித்த படம் ஜூராஸிக் பார்க். இப்படத்தை இயக்கிய ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் தொடர்ந்து தி லாஸ்ட் வேர்ல்ட் ஜூராசிக் பார்க், மைனாரிட்டி ரிப்போர்ட், வார் ஆப் த வேர்ல்ட் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கி உள்ளார்.

இவரது வளர்ப்பு மகள் மிக்கேலா கடந்த சில வாரங்களுக்கு முன்தான் ஆபாசப் பட நடிகை ஆகப்போவதாகவும், அடெல்ட் படங்கள் தயாரிக்கப்போவதாகவும் அறிவித்துப் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆபாசப் படத்தில் நடிக்க இவர் லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்திருப்பதாகவும் கூறினார்.

இந்நிலையில் மிக்கேலா திடீரென்று கைது செய்யப்பட்டார். இதனை அவரது கணவர் சக் பாங்கோவ் உறுதி செய்தார். ஆனால் இந்த சம்பவம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. இதனால் யாருக்கும் காயம் இல்லை என்றார். இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, குடும்ப பிரச்சினையில் நடந்த அடிதடி காரணமாக மிக்கேலா கைது செய்யப்பட்டார். 12 மணி நேரம் அவர் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் ஜாமினில் விடுதலையானார்' என்றார். ஆபாச நடிகை ஆகப்போவதாக மிக்கேலா அறிவித்த ஒரு வாரம் கழித்து அவரது குடும்பத்தில் இப்படியொரு சம்பவம் நடந்து, கைது வரை சென்றது ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Leave a reply