கூலிங்கிளாஸ் அணிந்து முட்டை தோசை ஊற்றி வைரலான நடிகை.. ரோட்டோர கடையில் ரகளை..

by Chandru, Mar 6, 2020, 18:36 PM IST

கனா படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயின்களில் விதிவிலக்காக இருக்கிறார்.

பிரபல நடிகர்களுக்குத் தங்கை வேடத்தில் நடிப்பதை பெரும்பாலான ஹீரோயின்கள் தவிர்த்து விடுகின்றனர். நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனின் தங்கையாகவும், வானம் கொட்டட்டும் படத்தில் விக்ரம் பிரபுவின் தங்கையாகவும் நடித்தார் ஐஸ்வர்யா. ஆனாலும் அவருக்கு ஹீரோயின் வேடங்கள் வந்துக்கொண்டு தான் இருக்கிறது. இப்போது விஷயம் அதுவல்ல. தனது இணைய தள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முட்டை தோசை ஊற்றி வேக வைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். படப்பிடிப்பிலிருந்தபோது ரோடோரா கடை ஒன்றிற்குச் சென்று அவர் அங்கிருந்த தோசை கல்லில் ஊற்றி முட்டை தோசை சுடும் ரகளை வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அது இப்போது நெட்டில் வைரலாகி வருகிறது.


Leave a reply