தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தேர்தல் தேவையில்லை.. பாரதிராஜா பரபரப்பு..

by Chandru, Mar 6, 2020, 18:47 PM IST

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் இன்றைய சூழ்நிலை குறித்து சென்னையில் தயாரிப்பாளர்கள் பாரதிராஜா , எஸ்.ஏ.சந்திரசேகர், கேயார், முரளிதரன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.



பாரதிராஜா கூறுகையில் , “தயாரிப்பாளர் சங்கத்திற்குத் தேர்தல் என்பது தேவை இல்லை. ஒற்றுமை இல்லாமல் பல அணிகளாகப் பிரிந்து நிற்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒரே அணியாக மாற வேண்டும். தலைவர் பதவிக்கு வருபவர்களுக்குச் சேவை மனப்பான்மை அதிகம் இருக்க வேண்டும். ஆனால் பலதரப்பட்ட போட்டி வரும்போது சேவை மனப்பான்மை இருக்காது. பதவிக்கு வருபவர்கள் தங்களுடைய அடையாளத்தைத் தொலைத்து விட்டுச் செயலாற்ற வேண்டும்.தேர்தல் இல்லாமல் வயதில் மூத்த தயாரிப்பாளர்கள் சொல்வதைக் கேட்டு ஒத்துப்போகும் நபர் தலைமை இடத்திற்கு வர வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம் "என்று குறிப்பிட்டார்.

எஸ்.ஏ.சந்திரசேகர் கூறுகையில் “நாங்கள் பதவிக்கு வரவேண்டுமென்ற எண்ணத்தில் இந்த முடிவை எடுக்கவில்லை. நாகரீகமான முறையில் ஒரு சங்கம் இருக்க வேண்டும் என்பதே நோக்கம். பதவியிலிருந்தாலும் ஒற்றுமை இல்லாததால் தயாரிப்பாளர் சங்கத்தில் எதையும் சாதிக்க முடியவில்லை. நான் தலைவராக இருந்த போதும் இதே நிலைதான் இருந்தது" என்றார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தயாரிப்பாளர்கள் கே. ராஜன் சுரேஷ் காமாட்சி உடனிருந்தனர்.

You'r reading தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தேர்தல் தேவையில்லை.. பாரதிராஜா பரபரப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை