டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டா கிராம் என இணைய தளத்தில் பலவகை கணக்குகளில் பல லட்சம் பேர் இணைந்திருக்கின்றனர். ஆனால் இவற்றிலிருந்து விலகி இருக்கிறார் தல அஜீத் குமார்.
அவரை இணைய தள பக்கத்தில் இணையும்படி ரசிகர்கள் வற்புறுத்தி வருகின்றனர். என்னதான் தனி ஆளாக ஒதுங்கிச் சென்றாலும் அவரை பின்தொடரும் ரசிகர் கூட்டம் குறையவில்லை. இந்நிலையில் அஜீத்குமார் இணைய தள பக்கத்தில் இணைய விருப்ப தாக நெட்டில் அஜீத் பெயரில் ஒரு அறிக்கை வெளியானது. அத்துடன் அஜீத் கையெழுத்தும் அதில் போடப்பட்டிருந்தது. அந்த கடிதத்தில்,' பல வருடங்களுக்கு முன்னர் அனைத்து சமூக வலைத் தளங்களிலிருந்தும் நான் ஒதுங்கியிருந்ததுடன் எனக் கான மன்றங்களையும் கலைத்திருந்தேன். இதற்கான காரணங்களைப் பல முறை நான் உங்களிடம் தெரிவித்திருந்தேன். இந்நிலையில், தற்போது மீண்டும் சமூக வலைத் தளங்களில் இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது. அந்த வகையில் இந்த அறிக்கையின் மூலம் இணைய தளத்தில் இணைய இருக்கிறேன் என்ப தை தெரிவித்துக் கொள்வதுடன் நீங்கள் என்னுடன் இணைந்து கொள்ளலாம்' எனக் குறிப்பிடப் பட்டிருந்தது.
அஜீத் பெயரில் வெளியான இந்த அறிக்கையை அஜீத் தரப்பு மறுத்திருக்கிறது. வெளிநாட்டிலிருந்து யாரோ இப்படியொரு கடிதத்தைப் போலியாகத் தயாரித்து அதில் அஜித்போல் போலி கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளனர். இணைய தளத்தில் இணையவிருப்பதாக அஜீத் எந்த அறிக்கையும் வெளியிட வில்லை' எனக் கூறினர்.