ஹீரோவுக்கு தரும் மரியாதை ஹீரோயின்களுக்கு கிடையாது.. ஸ்ருதிஹாசன் ஆதங்கம்..

by Chandru, Mar 7, 2020, 18:57 PM IST

ஹீரோக்களுக்கு கிடைக்கும் மரியாதை ஹீரோயின்களுக்கு கிடைப்பதில்லை என்று ஆதங்கப்பட்டிருக்கிறார் ஸ்ருதி ஹாசன்.

அவர் கூறியதாவது:
சினிமாவில் ஹீரோக்களுக்கு கிடைக்கும் மரியாதை ஹீரோயின்களுக்கு கிடைப்பதில்லை. ஏன் உட்காருவதற்கு இருக்கை கூட தருவதில்லை. இது நான் சொல்லித் தெரியவேண்டிய தில்லை, வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்த ரகசியம். இன்றைக்கு நேற்றைக்கு அல்ல பல வருடங்களாக இதுதான் நடக்கிறது. எங்களது குடும்பமே சினிமா குடும்பம். ஆனால் நான் அவமானங்களை சந்தித்திருக்கிறேன். நெகடிவாக என்னைப் பற்றி தவறான வதந்தி பரப்புகிறார்கள்.

அது எனக்கு பலமுறை தொல்லையில் முடிந்திருக்கிறது. படப்பிடிப்பு நேரத்தில் சில சமயம் புத்தகங் கள் வாசிப்பதற்குக் கூட எனக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. ஒரு சிலர் எனது நடைமுறை வாழ்க்கையைக் கவனித்து விமர்சனம் செய்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். ஹீரோயின்களுக்கும் உரிய மரியாதை தரப்பட வேண்டும்
இவ்வாறு ஸ்ருதிஹாசன் கூறியிருக்கிறார்.


Leave a reply