நடிகை கேத்ரின் தெரசா கடைசி யாக தமிழில் அருவம் படத்தில் நடித்திருந்தார். அப்படம் வெளியாகிவிட்டது. தற்போதைக்கு கேத்ரினாவுக்கு தமிழில் கைவசம் படம் எதுவும் இல்லை.
தெலுங்கில் விஜய தேவர கொண்டா நடித்த வேர்ல்டு பேமஸ் லவர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சில ஹீரோயின்கள் இடையே போட்டி நிலவியதில் கேத்ரின் தெரசா தேர்வானார். அதிர்ஷ்ட காற்று வீசத் தொடங்கிவிட்டது, இப்படம் ஹிட்டாகும், தனது மார்க் கெட்டும், சம்பளமும் உயரும் என கணக்குப்போட்டார். அதனால் வேறு படங்களை ஒப்புக் கொள்ளாமல் தவிர்த்து வந்தார். என்.டி.பாலகிருஷ்ணாவுடன் 1 கோடி சம்பளத்துக்கு நடிக்க வந்த வாய்ப்பை கூட ஏற்க மறுத்து விட்டார். இந்நிலையில் கேத்ரின் சினிமா வாழ்க்கையில் விதி விளையாடிவிட்டது.
வேர்ல்டு பேமஸ் லவர் படம் வெளியாகி தோல்வி அடைந்தது. தயாரிப்பாளரே ஹீரோவிடம் நஷ்டஈடு கேட்டுக் கொண்டிருக்கும் சூழல் ஏற்பட்டது. இதனால் கேத்ரின் மனம் உடைந்து போனார். அப்செட் ஆகியிருக்கும் கேத்ரின் வீட்டில் முடங்கியிருந்தால் கூடுதல் எடைபோட்டு நடிகைக் கான தோற்றத்தைப் பறிகொடுத்துவிடுமோ என்று பயந்து தினமும் ஜிம்மிற்கு சென்று உடல் தோற்றத்தை ஸ்லிம்மாக பராமரிக்கிறார். தற்போதுவரை 5 கிலோ குறைந்துவிட்டாராம். அவரது ஒல்லியான தோற்றத்தை ரசிகர்கள் சிலர் இதற்குமேல் ஒல்லியாகிவிடாதீர்கள் அழகு குறைந்துபோகும் என அட்வைஸ் தந்திருக்கின்றனர்.