இந்தியாவின் முன்னணி வீணை இசைக்கலைஞர் கலைமாமணி ஸ்ரீராஜேஷ் வைத்யா. கடந்த ஆண்டு ஒரு நிமிடம் இருக்கிறதா என்ற தலைப்பில் 60நிமிடம் 60 பாடல்களை இசைத்து சாதனை புரிந்தார். அதேபோல் தற்போது 100 நிமிடத்தில் 100 பாடல்களை அவர் நிகழ்த்த உள்ளார். சென்னையில் இன்று மாலை அவர் இந்த நிகழ்வு குறித்து அறிவித்தார்.
அவர் கூறியதாவது :
வீணைதான் எனது உயிர் நான் கச்சேரியில் வாசிக்கும்போது இந்த பாடல் நன்றாக இருந்தது அந்த பாடல் நன்றாக இருந்தது. என்று கருத்துச் சொல்வார்கள். ஒரு கட்டத்தில் நேயர் விருப்பம் என்ற நேரம் ஒதுக்கி அவர்கள் விரும்பி கேட்கும் சினிமா பாடல். பக்தி பாடல் என எது கேட்கிறார்களோ அதை வாசிப்பேன். அதற்கென்று பெரிய ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ஏற்கெனவே 60 நிமிடத்தில் 60 பாடல் வாசித்தேன் இம்முறை 100 நிமிடத்தில் 100பாடல்கள் வாசிக்க உள்ளேன். வரும் 21ம் தேதி சென்னை நுங்கம் பாக்கம் ஹாரிங்டன் ரோடில் உள்ள ஸ்ரீ முத்தையா வெங்ட சுப்பராவ் அரங்கில் மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.100 நிமிடத்தில் 100 பாடல்களும் இடைவிடாமல் இசைக்கப்படும்.
நீங்கள் ஏன் சினிமாவுக்கு இசை அமைக்கவில்லை என்கிறார்கள் இந்த ஆண்டு சினிமாவுக்கு இசை அமைக்கிறேன். அது பற்றி விரைவில் அறிவிக்கிறேன். நடிக்கவும் கேட்கிறார்கள். எனது நேரத்துக்கு ஏற்ற வகையில் இருந்தால் நடிப்பேன்
இவ்வாறு ராஜேஷ் வைத்யா கூறினார்.
இந்த நிகழ்ச்சியை சில்வர் ட்ரீ டேலண்ட் மற்றும் பிஆர்ஒ நிகில் முருகன் ஏற்பாடு செய்கின்றனர்.