நடிகர் வடிவேலு காமெடியனாக புதிய படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருப்பதால் அவரது லக லக காமெடி கலாட்டாக்கள் இல்லாமல் மீம்ஸ் கிரியேட்டர்கள் பழைய காமெடிகளை வைத்தே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் அவ்வப்போது பொது வெளியில் தடாலடியாகப் பேட்டி கொடுத்து மீம்ஸ் கிரியேட்டர் களுக்கு புத்துயிர் ஊட்டிக் கொண்டிருக்கிறார் வடிவேலு.
சமீபத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார் வடிவேலு. அவரை அங்கிருந்த பத்திரியைாளர்கள் பேட்டி கண்டனர். ரஜினியின் அரசியல் பேச்சு குறித்துக் கேட்டபோது பதிலளித்தார். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா இல்லையா என்பது அவருக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது ஏன் உங்களுக்கும் தெரியாது. கட்சிக்கு ஒரு தலைவர், ஆட்சிக்கு ஒரு தலைவர் என்ற அவரது நிலை வரவேற்கத்தக்கது. தனக்கு முதல்வர் ஆசையில்லை என்று ரஜினி கூறியது நல்ல விஷயம். மக்களுக்கு யார் நல்லது செய்தாலும் வரவேற்கலாம். 2021ல் நான் தான் சி.எம். அதைச் சிலர் கெடுக்கப் பார்க்கிறார்கள். நான் எங்கிருந்தாலும் ஓட்டு போடுவீங்கில்ல... (போடுவோம் என்று ரசிகர்கள் பதில்) அப்ப நான்தான் சிம்' என்றார் வடிவேலு.