கிரிக்கெட் போட்டியில் உலக கோப்பையை முதன்முறையாக 1983 ஆம் ஆண்டு இந்திய கைபற்றியது. அந்த கதை தற்போது கபிர் தேவ் என்ற பெயரில் படமாகி வருகிறது.
அப்போது கிரிக்கெட் அணி கேப்டனாக கபில்தேவ் இருந்தார். அந்த வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். உலக கோப்பையை பெற்றுக்கொண்ட கபில்தேவ் அதை மகிழ்ச்சியாக மேலே உயர்த்தி ரசிகர்களிடம் காட்டி மகிழ்ந்தார். அப்படியொரு உற்சாக பெருக்கான காட்சி ரன்வீர் சிங் நடிக்க படமானது. நினைத்தபடி காட்சி நன்றாக வந்ததையடுத்து படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் கபில்தேவ்போலவே கைஉயர்த்தி கோப்பையை காட்டிய போஸைப்போல் ரன்வீர் சிங்கும் நடிக்க அந்த புகைப்படம் வெளியாகி பரபரப்பாகி உள்ளது.
1983ம் ஆண்டில் கிரிக்கெட் கோப்பையை வென்ற கபில் தேவ்போலவே ரன்வீர் சிங் அளித்திருக்கும் போஸ் நூறு சதவீதம் பொருந்துகிறது. ஆனால் உருவ ஒற்றைமையில் பர்சென்ட்டேஜ் கொஞ்சம் கம்மிதான் என்கிறது ரசிக வட்டம்.