இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் அஜய் ஞான முத்து. இவர் டிமான்டி காலணி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கினார். தற்போது விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையால் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்துள்ளது. இதற்கிடையில் அஜய் ஞான முத்து நடிகர் விஜய்யின் 65 படத்தை இயக்க உள்ளதாகத் தகவல் பரவியது.
இதுகுறித்து ரசிகர் ஒருவர் அஜய் ஞானமுத்துவிடம் டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். 'விஜய்யின் அடுத்த படத்தை உண்மையில் நீங்கள் (அஜய் ஞானமுத்து) இயக்குகிறீர்களா?' என கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த இயக் குனர், 'நோ.... இது யாரு பாத்த வேலன்னு தெரியல' எனப் பதிலில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஏற்கனவே விஜய் 65 வது படத்தை இயக்கப்போவதாகச் சுதா கொங்கரா, ஏ.ஆர்.முருகதாஸ், அட்லி ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன.