தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு விஷால் தலைவராகப் பொறுப்பு வகித் தார். அதில் பல்வேறு பிரச்சினை களை காரணம் காட்டி விஷால் தலைமையிலான நிர்வாகிகள் குழு கலைக்கப்பட்டுத் தனி அதிகாரி தலைமையில் பாரதி ராஜா உள்ளிட்ட கமிட்டியை அரசு அமைத்து உத்தரவிட்டது.
சங்கப் பணிகளை தற்போது இந்த குழு கவனித்து வருகிறது. விரைவில் சங்கத்துக்குத் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் டி.சிவா தலைமையில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி உருவாகியிருக்கிறது. தலைவர் பதவிக்கு டி.சிவா போட்டியிடச் செயலாளர்களாக பி.எல்.தேனப் பன், ஜேஎஸ்கே.சதீஷ்குமார், துணைத் தலைவர்களாக தனஞ் செயன், ஆர்.கே.சுரேஷ், பொரு ளாராக கே.முரளிதரன். செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்புக்கு நடிகர் ராதாரவி உள்ளிட்ட 21 பேர் இந்த அணி சார்பில் போட்டியிட உள்ளனர்.
'தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களின் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி தற்போது முடிந்துவிட்டது. அவர்கள் யாரேனும் உடல்நிலை பாதிக்கப் பட்டால் தற்போதிருக்கும் இன்சூரன்ஸ் பாலிசியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புதிய நிர்வாகம் தேர்வான பிறகே பாலிசியை புதுப்பிக்க முடியும். இதற்கிடையில் உறுப்பினர்கள் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டு இன்சூரன்ஸ் உதவி தேவைப்பட்டால் 5 லட்சம் வரை ஏற்பாடு செய்த தர எங்கள் அணியினரைத் தொடர்பு கொள்ளலாம்' எனத் தலைவர் பதவி போட்டியிடும் டி.சிவா கூறினார்.
நிகழ்ச்சியில் பட அதிபர்கள் கே.முரளிதரன், பி.எல்.தேனப் பன், விஜயகுமார், எஸ்.எஸ். துரைராஜ், மனோஜ்குமார், ஜே.எஸ்.கே. சதீஷ்குமார், சுப்புபஞ்சு, தனஞ்ஜெயன், நந்தகுமார், பாபுகணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.