கழுகு படத்தில் நடித்ததுடன் வேலு, வீரா. களறி, , யட்சன், மாரி 2, கங்கார் படங்கிலும் நடித்திருக்கிறார். திரையுலகையே கொரேனோ வைரஸ் அச்சத்தில் ஆழ்த்தியிருப்பதால் ஒருவருக்கொருவர் நேரில் சந்திக்கும்போது கைகுலுக்கிக் கொள்ளாமல் இருகரம் கூப்பி வணக்கம் செய்துகொள்கின்றனர். அதேசமயம் தங்களது ரசிகர்களுக்கு டிவிட்டர் மெசேஜ் மூலம் விழிப்புணர்வும், பாதுகாப்பு எண்ணத்தையும் உருவாக்கி வருகின்றனர்.
பல இடங்களில் தொழில்கள் ஷட் டவுன் செய்யப்பட்டிருப்பதால் தினப் பணியாளர்கள் சம்பளம் இல்லாமல் சிரமத்துக் குள்ளாகியிருக்கின்றனர். இதுகுறித்து நடிகர் கிருஷ்ணா கூறும்போது,'என்னை சார்ந்திருக்கும் டிரைவர், பணியாளர், வாட்ச் மேன் ஆகியோரை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்களும் உங்களைச் சார்ந்து இருப்பவர்களைப் பார்த்துக் கொண்டால் நல்லது' எனத் தெரிவித்திருக்கிறார்.
அதேபோல் நடிகை காஜல் அகர்வால், தினமும் சம்பளம் கிடைக்காமல் கஷ்டப்படும் ஒரு டிரைவர்பற்றிய உருக்கமான பதிவை வெளியிட்டிருக்கிறார்.
கால் டாக்ஸியில் பயணம் செய்ய டிரைவரை அழைத்த போது அந்த காரின் டிரைவர் எனக்கு நன்றி சொன்னார். 75 கி.மீட்டர் தூரத்திலிருந்து வருகிறேன். எந்த சவாரியும் கிடைக்கவில்லை. நீங்கள்தான் முதல் சவாரி. இந்த பணத்தை வாங்கிச் சென்று கொடுத்தால் தான் என் மனைவி இன்றைக்குச் சமைப்பாள், இல்லாவிட்டால் பட்டினிதான். தினசரி கிடைக்கும் வருமானத்தை நம்பிதான் வாழ்க்கை ஓடுகிறது. அவரது நிலைமையை நேரில் கண்ட போது மனதுக்குக் கஷ்டமாகி விட்டது. இதுபோல் நிலை யாருக்கும் வரக்கூடாது. கோரோ னோ அச்சம் நீங்கும் வரை தினசரி சம்பளம் கிடைக்காமல் கஷ்டப்படுபவர்களுக்கு உங்களால் இயன்றதை உதவுங்கள்' எனத் தெரிவித்திருக்கிறார்.
கிருஷ்ணா, காஜல் அகர்வால் இருவரின் உருக்கமான பதிவு பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது.