பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான். இவரது மகள் சாரா அலிகான். படப்பிடிப்புக்காக வாரணாசி சென்றிருந்தார். அவருடன் அவரது தாயார் அம்ரிட்டா சிங்கும் சென்றிருந்தார்.
படப்பிடிப்பு இடைவேளையில் சாரா தனது தாயார் அம்ரிட்டாவுடன் காசி விஸ்வாதர் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டார். இது சர்ச்சையாகி உள்ளது. அப்பகுதியில் உள்ள மஹாசபா என்ற மத அமைப்பினர் சாரா அலிக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். பிற மதத்தினர் இந்து கோயிலுக்குள் நுழையக்கூடாது என்று கோயில் வாசலில் நோட்டிஸ் ஒட்டப்பட்டிருந்தும் அதை மீறிச் சாரா எப்படி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்யலாம். அதற்கு அங்கிருந்த ஊழியர்கள் எப்படி அனுமதித்தனர். சனாதன பாரம்பரியத்தைக் கோயில் அதிகாரிகள் கட்டிக்காக்கத் தவறி விட்டனர். விரைவில் இது குறித்து உயர் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று மஹாசபா பொதுச்செயலாளர் தினேஷ் திவாரி என்பவர் தெரிவித்திருக்கிறார்.