பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் முதல் பாகத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் காயத்ரி ரகுராம். ஸ்டைல், பரசுராம், விசில், விகடன் போன்ற படங்களில் நடித்தார். பின்னர் பிஜேபி கட்சியில் சேர்ந்தார். குடித்துவிட்டு கார் ஓட்டியதாக எழுந்த சர்ச்சையை அடுத்து அவர் கட்சியிலிருந்து விலகினார். மீண்டும் அவர் அக்கட்சியில் இணைந்தார்.
மத்திய ஆட்சிக்கு எதிராக நட்சத்திரங்கள் யாராவது குறை கூறினால் அவர்களுக்குப் பதிலடி கொடுப்பதுதான் காயத்ரியின் முக்கிய வேலையாக இருக்கிறது.
சமீபத்தில் சென்னையில் நடந்த விஜய்யின் மாஸ்டர் ஆடியோ ரிலீஸ் விழாவில் பங்கேற்ற விஜய்சேதுபதி,'மதங்கள் பெயரைச் சொல்லி பிரச்சினை ஏற்படுத்தும் கும்பலிடம் பேசாதீர்கள். கடவுளை யாரும் காப்பாற்ற வேண்டியதில்லை அவரே தன்னைதானே காப்பாற்றிக்கொள்வார் என்று தடாலடியாகப் பேசினார். இதையடுத்து விஜய்சேது பதிக்கு காயத்ரி கண்டனம் தெரிவித்து மெசேஜ் வெளியிட்டார். அதைக்கண்டு கோபம் அடைந்த விஜய்சேதுபதியின் ரசிகர்கள் காயத்ரியைக் கெட்ட வார்த்தைகளில் திட்டி மெசேஜ் வெளியிட்டு வருகின்றனர். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த காயத்ரி உடனே ரசிகர்கள் தன்னை திட்டி அனுப்பிய மெசேஜை ஸ்கிரீன் ஷாட் எடுத்து தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டு கேள்வி எழுப்பி உள்ளார்.
'விஜய்சேதுபதி ரசிகர்கள் என்ற போர்வையை மூடிக்கொண்டு 2 அரசியல் கட்சியின் தொண்டர்கள்தான் இந்தவேலையைச் செய்து வருகின்றனர். அவர்கள் உங்கள் ரசிகர்கள் என்றால் இதுதான் அவர்களிடம் இருக்கும் மனிதாபிமானமா? இதுபோன்ற விவஸ்தை இல்லாதவர்களைவிட புருடா விட்ற சாமி கும்பல் பெட்டர் இல்லையா?' என காயத்ரி கேட்டிருக்கிறார்.