தனுஷ் நடிகை 14 நாட்கள் தனிமை சிறை.. காரணம் இதுதான்..

by Chandru, Mar 20, 2020, 11:35 AM IST

நடிகர் தனுஷ் இந்தியில் நடித்த ராஞ்சனா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் சோனம் கபூர். இவர் பாலிவுட் பிரபல நடிகர் அனில் கபூர் மகள். பெரிய அளவில் பட வாய்ப்புகள் வராததால் அப்செட் ஆனார் சோனம்.

குடும்பத்தினர் அவருக்குத் திருமண ஏற்பாடு செய்தனர். ஆனந்த் அஹுஜா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். மாமியார் வீட்டில் வசித்து வரும் சோனம் கபூர் சில வாரங்களுக்கு முன் கணவர் ஆனந்த் உடன் லண்டன் சென்றார். அங்கு இருவரும் நீண்ட நாட்கள் தங்கி பொழுதைக் கழித்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் இருவரும் இந்தியா திரும்பினார். இருவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை நடை பெற்றது. பிறகு வீட்டுக்கு வந்த சோனம்கபூர் உடனடியாக மாடியில் உள்ள அறைக்குச் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார். அதுபற்றி குடும்பத்தினர் கேட்டபோது வெளிநாட்டிலிருந்து வந்ததால் கொரோனா தொற்று பரவக்கூடாது என்பதால் டாக்டர்கள் அறிவுரைப்படி 14 நாட்கள் தனிமையில் இருக்க முடிவு செய்திருக்கிறேன். என்னிடம் பேச வேண்டுமென்றால் கதவுக்கு வெளியிலிருந்தே பேசுங்கள் எனக் கணவர் குடும்பத்தினரிடம் கூறினார்.

மாடி அறையில் இருக்கும் சோனமிடம் பேசும் அவரது மாமியார் பிரியா அஹுஜா இன்னும் ஜாக்கிரதையாகக் கீழ்த் தளத்திலிருந்து அவரிடம் பேசிக்கொள்கிறார். அக்காட்சியை சோனமின் கணவர் ஆனந்த் படமாக எடுத்து நெட்டில் பகிர்ந்திருக்கிறார்.


Leave a reply