சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதை டர்ட்டி பிக்சர்ஸ் பெயரில் இந்தியில் உருவானது. சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யா பாலன் நடித்தார். அதில் அவருக்குத் தேசிய விருது கிடைத்தது. அப்படம் வெற்றி பெற்றதையடுத்து கவர்ச்சி நடிகை ஷகிலா வாழ்க்கையை மையமாக வைத்து ஷகிலா என்ற பெயரில் புதிய படம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஷகிலா வேடத்தில் நடிக்கப் பல நடிகைகள் மறுத்து விட்டனர். பாலிவுட் நடிகை ரிச்சா சதாவை அணுகியபோது நடிக்க ஒப்புக்கொண்டார்.10க்கும் மேற்பட்ட கெட்டப் அணிந்து இதில் ரிச்சா நடிக்கிறார். ஆனால் இது அந்த படத்தைப்பற்றிய விஷயமல்ல ரிச்சாவின் திருமணம் பற்றியது.
ரிச்சாவுக்கும் அவரது காதலன் அலி பாசலுக்கு வரும் ஏப்ரல் மாதம் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதுபற்றி உறவினர்கள், நண்பர்களுக்குத் தெரிவித்திருந்தனர். தற்போது திடீரென்று திருமணத்தை ரத்து செய்துவிட்டனர். அவர்கள் திருமணத்துக்குள் புகுந்து குட்டையைக் குழப்பியிருப்பது கொரோனா வைரஸ் பயம்தான். திருமணத்தின்போது உறவினர்கள், ரசிகர்கள் திரளும் போது கொரோனா தொற்று ஏற்பட்ட வாய்ப்பிருக்கிறது. அதனால் முன்னெச்சரிக்கை யாக திருமணத்தை ரத்து செய்திருக்கிறோம்.. இதே ஆண்டில் மற்றொரு தேதியில் எங்கள் திருமணம் நடக்கும் எனத் தெரிவித்திருக்கிறார் ரிச்சா.