சாபம் விட்ட நடிகை கஸ்தூரி.. உனக்கு கொரோனா வர, நீ பஸ்லதான் அடிபட்டுச் சாவ.

by Chandru, Mar 22, 2020, 15:51 PM IST

நடிகை கஸ்தூரி தன்னிடம் வம்பிழுப்பவர்களை லைப்ட் ரைட் வாங்கி திட்டி துரத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஆனால் தற்போது ஒருவருக்குச் சாபமிட்டிருக்கிறார்.

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் 4 பேருக்குச் சமீபத்தில் தூக்கு துண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த வழக்கு தொடர்பாகச் சிறுவன் ஒருவன் விடுவிக்கப்பட்டான். அவனுக்குத்தான் கஸ்தூரி சாபமிட்டுள்ளார்.

'கடைசியாக நிர்பயா வழக்கில் 4 விலங்குகள் தூக்கிலிடப்பட்டனர். ஜுவெனில் (சிறுவன்) என்ற சட்டப் பிரிவின் கீழ் உள்ள ஓட்டை வழி யாக ஒருவன் விடுதலையாகி விட்டான். அவனுக்கு கொரோனா வைரஸ் வரட்டும் அல்லது பஸ் அடியில் அடிபட்டு சாவட்டும் எனச் சாபம் விட்டுத் தள்ளியிருக்கிறார்.


Leave a reply