ராஷ்மிகாவை தூக்கி எறிந்த மாஜி காதல் நடிகர்.. இதுதான் பழிக்கு பழி எப்ப்ப்பூடி....

by Chandru, Mar 26, 2020, 13:04 PM IST

கோலிவுட், டோலிவுட் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார் ராஷ்மிகா மந்தன்னா. ஏற்கனவே விஜயதேவர கொண்டாவுடன் டியர் காம்ரேட் படத்தில் நடித்தவர் தற்போது தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் நடிக்கிறார்.

ரசிகர்கள் மனதில் இடம்பிடிப்பதற்கு முன்பாக கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி மனத்தில் இடம் பிடித்தார் ராஷ்மிகா. கிரிக் பார்ட்டி என்ற படத்தில் இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. திருமண நாள் குறித்து நிச்சயதார்த்தம் நடந்தது. திடீரென்று அந்த திருமணத்தை ரத்து செய்துவிட்டு வெளியேறினார் ராஷ்மிகா. மனம் உடைந்தாலும் தேற்றிக் கொண்டே தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் ரக்‌ஷிட் ஷெட்டி.

கடந்த ஆண்டு ரக்‌ஷித் ஷெட்டி நடித்த அவனே ஸ்ரீமன்நாராயணா என்ற படம் தமிழில் திரைக்கு வந்தது. தற்போது கிரிக் பார்ட்டி 2ம் பாகம் படத்தில் நடிக்க விருக்கிறார். முதல் பாகத்தில் ராஷ்மிகா நடித்திருந்த நிலையில் 2ம் பாகத்தில் மீண்டும் ராஷ்கா நடிப்பாரா என்று கேட்டதற்கு பதில் அளித்தார். அவர் கூறும்போது
'இல்லை, இதில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க உள்ளனர்' என்றார் ரக்ஷித் ஷெட்டி.
நிச்சயதார்த்தம் நடந்தபிறகு தன்னை தூக்கி எறிந்த மாஜி காதலி ராஷ்மிகாவை பழிக்குபழியாக அவர் நடித்த படத்தின் 2ம் பாகத்திலிருந்து அவரை தூக்கி எறிந்திருக்கிறார் ரக்‌ஷித் ஷெட்டி.


Leave a reply