டபுள் ஹீரோ படத்துக்கு பில்டப்......
விஜய்யை இயக்கப்போகிறார் பாகுபலி பட இயக்குனர் ராஜமவுலி என்ற வரிகளுக்கு ஒரு பவர் இருக்கும் நிலையில் அவர்கள் இருவரும் இணைந்தால் அந்த படத்தின் எதிர்பார்ப்பு ஹாலிவுட படங்களைவிட அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தற்போது ஆர் ஆர் ஆர் என்ற பெயரில் புதிய படம் இயக்கி வருகிறார் ராஜமவுலி. இதில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் இணைந்து நடிக்கிறாரர். இப்படத்தின் படப்பிடிப்பு பிரமாண்ட அரங்குகளில் நடந்துள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிய வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு சரித்திர கதையாக இதன் ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டிருக்கிறது. தெலுங்கு தவிரத் தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவிருக்கிறது. அதற்கு தற்போதைய நட்சத்திரங்கள் மட்டுமே போதுமானதாக இருக்காது என்ற எண்ணத்துக்கு வந்திருக்கிறாராம் ராஜமவுலி. ஸ்பெஷலாக ஒரு அம்சத்தைக் கூட்டினால் படத்தின் எதிர் பார்ப்பு எகிறும் என்று திட்டமிட்டிருக்கிறார்.
இதையடுத்து ஒவ்வொரு மொழியிலும் பெரிய நடிகர் ஒருவரை ஆர்ஆர்ஆர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்கி உள்ளார். தமிழில் வெளியாக உள்ள படத்தில் விஜய்யை நடிக்க வைக்க எண்ணி உள்ளாராம். ஆனால் இதனைப் படத் தரப்பு இன்னும் உறுதி செய்யவில்லை. கெஸ்ட் ரோலில் விஜய் நடிப்பாரா என்று கேட்டால் ஏற்கனவே நடித்திருக்கிறார் என்று பதில் வருகிறது. பிரபு தேவா இந்தியில் இயக்கிய ரவுடி ரத்தோட் என்ற படத்தில் விஜய் ஒரு பாடலுக்கு நடனம் அடியிருந்தார். அதனால் ராஜமவுலி இயக்கும் படத்திலும் நடிப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை வதந்தி என்று விஜய் தரப்பினர் மறுத்திருக்கின்றனர்.