நடிகை திரிஷா தமிழில் நடித்துக்கொண்டே தெலுங்கிலும் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருந்தார். தெலுங்கில் நடித்த போது பாகுபலி நடிகர் ராணாவுடன் டேட்டிங் செய்து வந்தார். ராணா, திரிஷா காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின. அதுபற்றி கண்டு கொள்ளாமல் இருவரும் தங்களது உறவை தொடர்ந்தனர்.
திடீரென்று இருவரும் பிரிந்தனர். திரிஷாவுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தம் செய்தனர். அந்த திருமணத்தையும் ஒரு கட்டத்தில் திரிஷா உதறி விட்டு சிங்கிளாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.கொரோனா வைரஸ் தாக்கத்தால் நடிகர் நடிகைகள் வீட்டில் போரடித்து உட்கார்ந்திருக்கின்றனர். காலையில் ஷுட்டிங் மாலையில் பார்ட்டி என்று பிசியாக இருந்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தோழிகளுக்கும் பழைய நபர்களுக்கும் வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசி பொழுதைக் கழிக்கின்றனர்.
ஏற்கெனவே பிரேக் அப் செய்து கொண்ட ராணாவுடன் திரிஷா மீண்டும் தனது நட்பை புதுப்பித்திருக்கிறார். இருவரும் வீடியோ காலில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களுடன் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனும் சேர்ந்துக்கொண்டு அரட்டை கச்சேரி நடத்தினர்.