காமெடி நடிகர் சூரி வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பரோட்டா சூரி ஆனார். தற்போது கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருப்பதால் சமையல் வேலையை கையிலெடுத்திருக்கிறார்.
அடுப்படியிலிருந்து மனைவிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு பிரியாணி செய்யக் குழந்தைகளை கூட்டு சேர்த்துக் கொண்டு களத்தில் இறங்கினார்.மகன் சுக்கா பிரியாணி கேட்டதும், 'நான் செய்யற பிரியாணி வாசனை செங்கல்பட்டு வரைக்கும் வீசும்' என்றார். அதற்கு உடனே பதில் அளித்த அவரது மனைவி, 'ஏன் அவ்வளவு நாறுமா. 'என்று நக்கலடிக்க உடனே சூரி இதை ருசி பார்த்துட்டு சொல்லு எனப் பதிலடிதந்தார். சூரி ருசியாகச் சமைக்கக்கூடியவர் என்பது படப்பிடிப்பில் அவருடன் பழகுபவர்களுக்கு நன்கு தெரியும்.