கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்திய முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். நகரங்களில் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் போர்ரான வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். டிவி சீரியல் ஷூட்டிங்கும் இல்லாததால் பழைய சீரியல்களை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
90களில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான சக்திமான்., மகாபாரதம், ராமாயணம் போன்ற சீரியல்கள் பிரபலம். வருடக்கணக்கில் அவை ஒளிபரப்பாகின. அந்த சீரியல்களை தூர்தர்ஷன் தூசி தட்டி கையிலெடுத்திருக்கிறது.22 ஆண்டுகளுக்கு முன் அதாவது கடந்த 1997ஆம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை 8 ஆண்டுகள் ஒளிபரப்பானது சக்திமான் சீரியல். 90ஸ் குழந்தைகளுக்கு சக்திமான் என்றால் உயிர். இது 520 எபிசோடுகள் ஒளிபரப்பானது. இந்த சீரியல் தற்போது மீண்டும் ஒளிபரப்ப இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக விரைவில் வர உள்ளது. இதனை சக்திமான் தொடரில் சக்திமானாக நடித்த ஹீரோ மற்றும் தயாரிப்பாளர் முகேஷ் கண்ணா தனது இணைய தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ராமாயணம் மற்றும் மகாபாரதம் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டது.
33 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒளிபரப்பப்பட்டாலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.