அமைச்சருக்கு நடிகர் நாசர் கடிதம்.. அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யுங்கள்..

Nassar requests TN Government to help struggling actors

by Chandru, Apr 1, 2020, 14:33 PM IST

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாக குழு சமீபத்தில் கலைக்கப்பட்டது. அதனை நிர்வகிக்க அரசு தனி அதிகாரியை நியமித்திருக்கிறது. தற்போது கொரொனா ஊரடங்கு காரணமாகப் படப்பிடிப்பு உள்ளிட்ட எல்லா பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகர் சங்க முன்னாள் தலைவர் நடிகர் நாசர் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
தென்னிந்திய நடிகர்‌ சங்கத்தில்‌ திரைப்படங்களில்‌ நடிக்கும்‌ துணை நடிகர்‌, நடிகையர்கள்‌ சுமார்‌ 1500 உறுப்பினர்களும்‌ மற்றும்‌ தமிழகத்தில்‌ அனைத்து மாவட்டங்களிலுள்ள நாடக கலைஞர்கள்‌ சுமார்‌ 2000-க்கும்‌ மேற்பட்டவர்கள்‌ உறுப்பினர்களாக உள்ளனர்‌. தற்போது உலகம்‌ முழுவதும்‌ கொரோனா வைரஸ்‌ பாதிப்பு காரணமாகத் தமிழகத்தில்‌ மார்ச்‌ மாதம்‌ முதல்‌ ஏப்ரல்‌ 14 வரை ஊரடங்கு உத்தரவு அரசு அறிவித்துள்ளது. இதனால்‌ திரைப்பட படப்பிடிப்புகளும்‌ மாவட்டங்களில்‌ நடைபெற இருந்த நாடக விழாக்களும்‌ நடைபெறாமல்‌ போனதால்‌ அதையே நம்பி இருக்கும்‌ அன்றாடம்‌ ஊதியம்‌ பெறும்‌ திரைப்படம்‌, நாடகம்‌ ஆகிய துறைகளில்‌ உள்ள கலைஞர்களின்‌ வாழ்வாதாரம்‌ மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

பொருளாதாரத்தில்‌ பின்தங்கிய நிலையுள்ள நலிந்த கலைஞர்கள்‌ உட்பட அனைவரும்‌ தங்கள்‌ அடிப் படை தேவைகள்‌ கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தாங்கள்‌ இதனைக் கருத்திற்கொண்டு. தென்னிந்திய நடிகர்‌ சங்க உறுப்பினர்களுக்கு திரைப்படத்துறை நல வாரியம்‌ மூலம்‌ உதவி செய்யப் பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்‌. மேலும், இக்காலகட்டத்தில்‌ தாங்கள்‌ செய்யும்‌ பேருதவி எங்களின்‌ மனதில்‌ நீங்காத இடம்‌ பெறும்‌ என்பதையும்‌ தெரிவித்துக் கொள்கிறேன்‌.

இவ்வாறு கடிதத்தில் நடிகர் நாசர் கூறி உள்ளார்.

You'r reading அமைச்சருக்கு நடிகர் நாசர் கடிதம்.. அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யுங்கள்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை