தங்க மீன்கள், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களை தயாரித்தவரும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க ஆலோசனை குழு உறுப்பினருமான ஜே எஸ் கே. சதீஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
கொரோனா வைரஸ் தாக்குதல் தடுப்பு நடவடிக் கைக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தினால் தமிழ்த் திரைப்படத் துறை முற்றிலும் ஸ்தம்பித்து அந்தந்த பணிகள் அப்படியே முடங்கி விட்டது. படவேலைகள் முடிந்து வெளியிடத் திட்டமிட்ட பட வேலைகளும் அப்படியே சிதைந்து விட்டது. அதனால் கதாநாயகர், கதாநாயகி, இயக்குநர், இசையமைப்பாளர், கேமிராமேன் மற்றும் முக்கியமான டெக்னிஷியன்கள், தங்கள் ஊதியத்திலிருந்து 30% சம்பளம் விட்டுக் கொடுத்து தயாரிப்பாளர்களுக்கு உதவ வேண்டும்.
திரைப்பட பைனாஸ்சியர் களும் தயாரிப்பாளர்களின் இந்த இக்கட்டான சூழ்நிலை யை கருத்தில் கொண்டு இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை அதாவது 2 மாதங்க ளோ, 3 மாதங்களோ அல்லது 4 மாதங்களோ அதுவரை வட்டி தொகையினை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என மிகத் தாழ்மையுடன் வேண்டுகோளை வைக்கிறேன்.
ஊரடங்கு அறிவிப்புக்கு முன்பு வெளியாகி ஓடிக் கொண்டிருந்த படங்களுக்கு இயல்பு நிலை திரும்பியதும் மீண்டும் ரீரிலீஸ் செய்வதற்கும் அதேபோல் சிறிய பட்ஜெட் படங்கள் வெளியிடவும் முன்னுரிமை தந்து உதவ வேண்டும் என்று தியேட்டர்கள் உரிமையாளர் சங்கத்திற்கும், விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கும் வேண்டுகோள் வைக்கிறேன்.
இவ்வாறு ஜே.எஸ்.கே.சதிஷ்குமார் கூறி உள்ளார்.