விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்தவர் வர்ஷா பொல்லம்மா. இவர் கொரோனா ஊரடங்கால் வீட்டில் பொழுதைக் கழித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடி அவர்களது கேள்விக்குப் பதில் அளித்து வருகிறார்.
அப்போது ஒரு ரசிகர், 'அதிகம் தண்ணீர் குடித்தால் உடல் மெலிந்து பளபளப்பாகும் என்கிறார்களே அது உண்மையா. நான் அதிகம் தண்ணீர் குடித்தால் எனக்கு அடிக்கடி உச்சாதான் வருகிறது' என்றார். அந்த கேள்வியைக் கண்டதும் வர்ஷாவுக்கு சிரிப்பு வந்து விட்டது.
அதற்குப் பதில் அளித்த வர்ஷா 'நானும் அதிகம் தண்ணீர் குடிக்கிறேன். அடிக்கடி பாத்ரூம் சென்று உச்சா போகவேண்டுமே என்று எண்ணி யாரும் தண்ணீர் குடிக்காமலிருந்து விடாதீர்கள்' என அட்வைஸ் செய்தார்.