டார்க் நைட் ரைஸஸ் நடிகர் கொரோனாவுக்கு பலி.. ஹாலிவுட் அதிர்ச்சி..

The Dark knight Risess Actor pasesaway Due to crono vairus

by Chandru, Apr 7, 2020, 15:29 PM IST

திரைப்படத் துறையினரைப் பொறுத்தவரை கொரோனா வைரசால் ஹாலிவுட் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே ஒன்றிரண்டு ஹாலிவுட் நடிகர்கள் பாதிக்கப்பட்டும் சிலர் இறந்ததும் அதிர்ச்சியாக அமைந்தது. மற்றொரு அதிர்ச்சியாக டார்க் நைட் ரைஸஸ் பட நடிகர் ஜே பெண்டிக்ட் கொரோனா வைரஸ் நோய்க்குப் பலியாகி இருக்கிறார். கடந்த வாரம் தான் இவர் தனது 69 வது பிறந்ததினத்தை கொண்டாடினார்.


ஜே பெண்டிக்ட் ஏற்கெனவே ஏலியன்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பதுடன் பிரெஞ், ஸ்பேனிஷ் போன்ற மொழிப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஜே பெண்டிக்ட் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இறந்தது ஹாலிவுட் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

You'r reading டார்க் நைட் ரைஸஸ் நடிகர் கொரோனாவுக்கு பலி.. ஹாலிவுட் அதிர்ச்சி.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை