ஹரிஷ் கல்யாண் படம் ரீரிலீஸ் கேள்விக்குறி.. டிஜிட்டல் தளத்துக்குப் போகிறது..

Dharala Prabhu in Digital Media

by Chandru, Apr 8, 2020, 12:00 PM IST

ஹரிஷ் கல்யாண் நடித்த படம் தாராள பிரபு. கதாநாயகியாக தான்யா ஹோப் நடித்திருந்தார். கிருஷ்ணா மாரிமுத்து இயக்கினார். இப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியானது. சில நாட்களிலேயே கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து திரைப்படங்கள் உள்ளிட்ட எல்லா வர்த்தகமும் முடங்கின.ஊரடங்கு முடிந்த பிறகு தாராள பிரபு படத்தை ரீ ரிலீஸ் செய்ய எண்ணியிருந்தனர். ஆனால் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது. இதையடுத்து படத்தை அமேசான் டிஜிட்டல் தளத்தில் இப்படத்தை வெளியிடுகின்றனர். தாராள பிரபு படம் இந்தியில் வெளியாகி ஹிட்டான விக்கி டோனர் படத்தின் ரீமேக் ஆகும்.

More Cinema News


அண்மைய செய்திகள்